ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதை யார் தடுத்தது? உமர் அப்துல்லா கேள்வி
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதை யார் தடுத்தது? உமர் அப்துல்லா கேள்வி
UPDATED : மார் 07, 2025 03:51 PM
ADDED : மார் 06, 2025 10:31 PM

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பதை யார் தடுத்தது. முடிந்தால் மீட்கட்டும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
லண்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதிலில், நாங்கள் காத்திருக்கும் பகுதி, சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் ' திருடப்பட்ட' பகுதியைத் திரும்பப் பெறுவது என்று நினைக்கிறேன். அது முடிந்ததும் காஷ்மீர் பிரச்னை முற்றிலுமாக தீர்க்கப்படும் என்றார்.
இது தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற முடிந்தால் அதனை செய்யட்டும். அவர்களை யார் தடுத்தது. முன்பு காங்கிரஸ் கட்சியை பா.ஜ., விமர்சித்தது. ஆனால், கார்கில் போரின் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற வாய்ப்பு இருந்தது. ஆனால், அதனை செய்யவில்லை. அப்பகுதியை திரும்பக் கொண்டு வர முடியுமானால், அதனை தற்போது செய்ய வேண்டும்.ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது.மற்றொரு பகுதியை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இதனை பற்றி யாரும் பேச மறுப்பது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.