தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்; ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்; ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்; ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

14


ADDED : அக் 23, 2026 11:10 AM

Follow on GoogleFavourite on Google

14

ADDED : அக் 23, 2026 11:10 AM


14
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-

துப்பறியும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. ரோஜர் மூர், சீன் கேனரி, திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் என பல நடிகர்களால் ஏற்கப்பட்டது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம். ஒவ்வொரு நடிகரும் அந்த கதாபாத்திரத்தின் புகழை உச்சத்துக்கு கொண்டு சென்றனர் என்றால் மிகையில்லை.

இப்போது அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் தயாரிப்புக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடக்கின்றன. டெனிஸ் வில்லென்யூவ், பாண்ட் திரைப்படத் தொடரின் அடுத்த பாகத்தை அமேசான் நிறுவனத்திற்காக இயக்கவிருக்கிறார். 'பீக்கி பிளைண்டர்ஸ்' தொடரின் எழுத்தாளரான ஸ்டீவன் நைட் திரைக்கதையை எழுதுகிறார்.

புதிய நடிகரை ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான தேர்வும் தொடங்கியுள்ளது. ஸ்கிரீன் டெஸ்ட் மற்றும் ஆடிஷன்கள் துவங்கி உள்ளனர். சாகச காட்சிகள், கேமரா முன் தோற்றம் மற்றும் வசனம் ஆகிய மூன்றில் நடிகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

முன்னணியில் யார்?

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டாலும், கேலம் டர்னர் முன்னணியில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜாக் லோடன், ஜேக்கப் எலார்டி, ஹென்றி கேவில், ஜான்சன், ஹாரிஸ் டிக்கின்சன் ஆகியோர் பெயரும் பட்டியலில் பரிசீலனையில் இருப்பதாக பேசப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும், உங்கள் மனதில் தோன்றும் அதிர்ஷ்ட நபர் யார் என்பதை கமென்டில் பதிவிடுங்கள் வாசர்களே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us