தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ போர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு யார் உதவுவது ஜி - 7 கூட்டத்தில் மோடி கேள்வி

 போர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு யார் உதவுவது ஜி - 7 கூட்டத்தில் மோடி கேள்வி

 போர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு யார் உதவுவது ஜி - 7 கூட்டத்தில் மோடி கேள்வி


ADDED : ஜூன் 18, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈவியான்: ஏதோ இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரால், அதனுடன் தொடர்பில்லாத நாடுகள் பாதிக்கப்படும்போது, அவற்றுக்கு யார் உதவுவது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரான்சின் ஈவியான நகரில் 'ஜி - 7' அமைப்பின் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேற்று நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மேற்காசியாவில் நான்கு மாதங்களாக நீடித்த போரால், எரிபொருள், உரம், உணவுப் பொருட்கள் என, பலவற்றின் வினியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில், வளர்ந்து வரும் நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டன.

ஏதோ இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் இதுபோன்ற போர், மோதல்களால், சண்டை - சச்சரவுகளால், அதனுடன் தொடர்பு இல்லாத நாடுகள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிட்டுள்ளன; அதற்கான விலையையும் கொடுக்க நேரிட்டன.

இதுபோன்ற சூழ்நிலைகளில், அதனுடன் தொடர்பில்லாத நாடுகள் சந்திக்கும் பொருளாதார பாதிப்புகள், இழப்புகளை யார் ஈடு செய்வது? இதற்கு சர்வதேச நிதி அமைப்புகள் உதவ முன் வர வேண்டும். அதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

அதுபோல, நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் தொடர்புகளை உருவாக்கும் வகையில், சர்வதேச அளவில் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கனடா, பிரிட்டன் பிரதமர்களுடன் சந்திப்பு ஜி - 7 மாநாட்டுக்கு இடையே, பல நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உடனான சந்திப்பின்போது, கடந்த ஆண்டு ஜூலையில் கையெழுத்தான தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில், பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உட்பட பல துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். கனடா பிரதமர் மார் கார்னியுடன் நடத்திய முக்கிய சந்திப்பின்போது, இரு தரப்பு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சை, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us