ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்தது ஜே.எம்.எம்.,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்தது ஜே.எம்.எம்.,
UPDATED : நவ 24, 2024 08:18 AM
ADDED : நவ 23, 2024 08:03 AM
முழு விபரம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்., மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இண்டியா கூட்டணி 56 தொகுதிகளிலும்,பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 24 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்டில் மொத்தமுள்ள, 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான இண்டியா கூட்டணி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி களம் கண்டன.
பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (நவ.,23) எண்ணப்பட்டன.
அதில்,
இண்டியா கூட்டணி -56
பா.ஜ., கூட்டணி- 24
மற்றவை- 1 தொகுதியையும் கைப்பற்றின.
கட்சி வாரியாக
ஜே.எம்.எம்., -34
பா.ஜ.,-21
காங்கிரஸ் -16
ஆர்.ஜே.டி., -4
சி.பி.ஐ.,(எம்.எல்.,) -2
ஏஜேஎஸ்யூ., லோக்ஜனசக்தி கட்சி, ஜார்க்கண்ட் லோக் தந்த்ரீக் கிராந்திகாரி மோர்ச்சா, ஐஜத ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தல்!
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ., 25 இடங்களை கைப்பற்றியது. இறுதியில் கூட்டணி பலத்துடன் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைத்தார்.