பா.ஜ.,வும், மம்தாவும் ஏன் ஒரே பாணியில் பேசுகிறார்கள்?: காங்., சாடல்
பா.ஜ.,வும், மம்தாவும் ஏன் ஒரே பாணியில் பேசுகிறார்கள்?: காங்., சாடல்
ADDED : பிப் 03, 2024 04:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பா.ஜ.,வும், மம்தாவும் ஏன் ஒரே பாணியில் பேசுகிறார்கள்? என காங்.,எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சாடியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டது, காங்கிரசுக்கு ஒன்றுமில்லை என்று பா.ஜ., சொல்கிறது. பா.ஜ.,வுக்கு எதிரொலியாக காங்கிரசுக்கு 40 இடங்கள் கிடைத்தாலும் போதும் என மம்தா பானர்ஜி கூறுகிறார். பா.ஜ.,வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதையே சொல்கிறார். பா.ஜ.,வும், மம்தாவும் ஏன் ஒரே பாணியில் பேசுகிறார்கள்?. ராகுல் நாடு மீது தான் முதலில் கவனம் செலுத்துவார். மற்ற அனைத்தும் பின்னர் தான். உங்களுக்கு (மம்தா பானர்ஜி) மாநில மீதான கவனம் பின்னர் தான். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

