செல்வந்தர்கள் கடனை ரத்து செய்வது ஏன்? கிருஷ்ண பைரேகவுடா கேள்வி!
செல்வந்தர்கள் கடனை ரத்து செய்வது ஏன்? கிருஷ்ண பைரேகவுடா கேள்வி!
ADDED : பிப் 12, 2024 06:56 AM

பெங்களூரு: ''நாட்டின் ஆயிரம் செல்வந்தர்களின், 1.75 லட்சம் கோடி ரூபாய் கடனை, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது இலவச பாக்யா இல்லையா,'' என வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கேள்வி எழுப்பினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
வாக்குறுதி திட்டங்கள் குறித்து, பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, இதுவரை அம்பானி, அதானி உட்பட சில செல்வந்தர்களின் 20 லட்சம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்தது.
இது என்ன பாக்யா என்பதை, பா.ஜ., தலைவர்கள் கூற வேண்டும். செல்வந்தர்களின் கடனை ரத்து செய்வதுடன், வரி விலக்கு சலுகையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த சுமையை புதிய வரிகள் ரூபத்தில், ஏழைகளின் தலையில் சுமத்துகிறது.
இதனால் ஏழைகள் பாதிப்படைகின்றனர். இவர்களின் உதவிக்காக எங்கள் அரசு, வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது.
ஏழைகள் மீதான வெறுப்பால், பா.ஜ., தலைவர்கள் வாக்குறுதி திட்டங்களை விமர்சிக்கின்றனர்.
ஆண்டு தோறும், நாட்டின் ஆயிரம் செல்வந்தர்களின், 1.75 லட்சம் கோடி ரூபாய் கடனை, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்கிறது.
இது இலவச பாக்யா இல்லையா, வாக்குறுதி திட்டங்களை திருடி, பா.ஜ., அரசியலுக்கு பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.