ADDED : மார் 20, 2026 05:50 AM

புதுடில்லி:தீயணைப்பு படையினர் தாமதமாக வந்ததும், வந்த வீரர்கள் வசம் வைத்திருந்த கிரேன் வேலை செய்யாததாலும் தான், ஒரே குடும்பத்தில், ஒன்பது பேரை தீயில் எரிய விட்டு பலி கொடுத்தேன். மொத்தத்தில், 'சிஸ்டம் பெயில்யர்' தான் இதற்கு துர்பாக்கிய சம்பவத்திற்கு காரணம் என அந்த குடும்பத்தில் எஞ்சியுள்ள நபர், அந்த, 75 வயது நேற்று கூறினார்.
தென் மேற்கு டில்லியில் உள்ள பாலம் அருகே உள்ளது ராம் சவுக் மார்க்கெட். குறுகலான சந்துகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள நான்காவது மாடியில் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு தீப்பிடித்தது.
மூன்று பேர் படுகாயம் இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஒன்பது பேர் இறந்தனர். இறந்தவர்களில், 70 வயது பெண், 3 வயது சிறுமி உள்பட மூன்று பெண்களும் அடக்கம். இந்த மோசமான தீ விபத்தில், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்த போது, அந்த வீட்டில் இல்லாமல், வேறு இடத்திற்கு தொழில் விஷயமாக சென்றிருந்த ராஜேந்தர் காஷ்யப் என்பவர் நேற்று தான், ஒன்பது பேர் இறந்த அந்த வீட்டிற்கு வந்தார்.
தற்போது, 75 வயதாகும் அந்த நபர் தான், அந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினர். தற்போது, உயிருடன் எஞ்சியிருப்பதும் அவர் தான்.
மொத்தம் நான்கு தளங்கள் கொண்ட அந்த கட்டடத்தில், அலங்கார பொருட்கள் விற்கும் கடை தரை தளம் மற்றும் மேல் தளத்தின் இருந்தது. அந்த தளங்களுக்கு மேல் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில், அந்த வீட்டின் உரிமையாளர் குடும்பங்கள் இருந்தன.
தரை தளத்தில் பற்றிய தீ, மளமளவென மேல் மாடிகளுக்கும் பரவியதில், அந்த மாடிகளில் இருந்த ஒன்பது பேர் இறந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
கிரேன் இந்த மோசமான விபத்து குறித்து நேற்று அந்த இடத்தை பார்வையிட்ட ராஜேந்தர் காஷ்யப் கூறியதாவது:
என் குடும்பத்தில், ஒன்பது பேரை பலி வாங்கிய தீ விபத்துக்கு என்ன காரணம் என சொல்வதை விட, சிஸ்டம் பெயிலியர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், தீ பிடித்துள்ளது என தெரிந்ததும், அந்த பகுதிக்கு வீரர்கள் வேகமாக விரைந்திருந்தால், இத்தனை பேரை பலி கொடுத்திருக்கத் தேவையில்லை. அது போல, மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் பற்றிய தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்களின் கிரேன்கள், வேலை பார்க்கவில்லை.
அதனால், புதிய கிரேன் வருவதற்குள், அரை மணி நேரத்திற்குள், தீ எங்கள் விதியோடு விளையாடி விட்டது. அனைவரும் எரிந்து சாம்பலாகி விட்டனர். இந்த விபத்துக்கு காரணம் எந்த தனி மனிதர்களும் இல்லை. டொட்டலி சிஸ்டம் பெயிலியர்.
இவ்வாறு அவர் அழுதபடி கூறினார்.
இந்த மோசமான விபத்து குறித்து, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு டில்லி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
உயிர் தப்பிய மூத்த உறுப்பினர் பேட்டி
