தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கர்நாடக வேட்பாளர்களை பா.ஜ., அறிவிக்காதது ஏன்?

கர்நாடக வேட்பாளர்களை பா.ஜ., அறிவிக்காதது ஏன்?

கர்நாடக வேட்பாளர்களை பா.ஜ., அறிவிக்காதது ஏன்?


ADDED : மார் 03, 2024 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ம.ஜ.த.,வுடன் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு இன்னும் முடிவு ஆகாததால், கர்நாடக பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான, 195 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களின் ஒரு தொகுதிக்கு கூட வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, கர்நாடக பா.ஜ., தலைவர்கள் விரக்தியில் ஏதேதோ பேசிக் கொள்கின்றனர். பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டும், அறிவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.

கர்நாடகாவில் கூட்டணி அமைத்துள்ள ம.ஜ.த.,வுடனான தொகுதி பங்கீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ம.ஜ.த.,வினர் ஆறு தொகுதிகள் கேட்கின்றனர்; பா.ஜ.,வினர் மூன்று தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்கின்றனர். இதனால், கூட்டணி இன்னும் இழுபறியிலேயே உள்ளது.

இந்த வாரத்தில் தான் இறுதிக்கட்ட பேச்சு நடக்க உள்ளது. அதன் பின்னரே வேட்பாளர்கள் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், 70 வயது நிரம்பியவர்களுக்கு பதிலாக, சில தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றியும் அக்கட்சி மேலிடம் யோசிக்கிறது.

எனவே அடுத்தகட்ட பட்டியலில், கர்நாடக வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us