தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்கிரஸ் பக்கம் ஜனார்த்தன ரெட்டி சாய்ந்தது ஏன்?

காங்கிரஸ் பக்கம் ஜனார்த்தன ரெட்டி சாய்ந்தது ஏன்?

காங்கிரஸ் பக்கம் ஜனார்த்தன ரெட்டி சாய்ந்தது ஏன்?


ADDED : பிப் 29, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு : ராஜ்யசபா தேர்தலில், கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி தலைவர் ஜனார்த்தன ரெட்டி, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தது ஏன் என்பது குறித்து, தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு நான்கு எம்.பி.,க்களை தேர்வு செய்ய, நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், காங்கிரஸ் மூன்று வேட்பாளர்கள், பா.ஜ., ஒரு வேட்பாளரை களம் இறக்கியது.

பா.ஜ., கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த.,வும் தங்கள் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லை என்றாலும், பா.ஜ.,வின் மிச்சம் ஓட்டுகள், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களை நம்பி, ஒரு வேட்பாளரை களம் இறக்கியது. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும், பா.ஜ., வேட்பாளர் ஒருவரும் வென்றனர்.

ம.ஜ.த.,வின் வேட்பாளர் தோல்வி அடைந்தார். நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, காங்கிரசை ஆதரித்தது தான். அவர் முன்பு பா.ஜ.,வில் இருந்தவர். அந்த கட்சியில் செல்வாக்குமிக்க நபராக இருந்தார்.

சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி, சிறை சென்று வந்த பின்னர், பா.ஜ.,வில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். இதனால் கடந்த சட்டசபை தேர்தலின்போது, கல்யாண ராஜ்ய பிரகதி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். கொப்பால், கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார்.

நெருக்கம்


ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காண்பித்தார். இடையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசினார். இதனால் அவரை மீண்டும் பா.ஜ.,வுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்தன. ஆனால், பலனிக்கவில்லை.

ஜனார்த்தன ரெட்டி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டபோது, அவருக்கு எதிராக பெங்களூரில் இருந்து பல்லாரி வரை, முதல்வர் சித்தராமையா பாதயாத்திரை நடத்தினார்.

இதனால் ராஜ்யசபா தேர்தலில் எப்படியும் தங்களை தான் ஆதரிப்பார் என, பா.ஜ., கூட்டணி தலைவர்கள் நம்பினர். ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஜனார்த்தன ரெட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

காங்கிரசை ஜனார்த்தன ரெட்டி ஆதரித்தது ஏன் என்பது குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது, கங்காவதி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள அவர், தனது தொகுதியில் நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்ய விரும்புகிறார்.

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்களுடன், ஜனார்த்தன ரெட்டி நட்பில் உள்ளார். அமைச்சர்களிடம் பக்குவமாக பேசி, தொகுதிக்கு வேண்டியதை செய்து வருகிறார்.

வாக்குறுதி


“உங்கள் தொகுதிக்கு வேண்டியதை செய்கிறோம். ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசை ஆதரியுங்கள்,” என, ஜனார்த்தன ரெட்டியிடம், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசி இருந்தார்.

ராஜ்யசபா தேர்தலுக்கு முந்தைய நாள் முதல்வர் சித்தராமையாவை, ஜனார்த்தன ரெட்டி சந்தித்தார். முதல்வரும் வாக்குறுதி அளித்ததால், ஜனார்த்தன ரெட்டி காங்கிரசை ஆதரித்தது தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us