ராகுல் பாத யாத்திரை மேற்கொண்டது ஏன்? பிரியங்கா சொல்கிறார் புது விளக்கம்
ராகுல் பாத யாத்திரை மேற்கொண்டது ஏன்? பிரியங்கா சொல்கிறார் புது விளக்கம்
UPDATED : நவ 04, 2024 09:27 PM
ADDED : நவ 04, 2024 09:24 PM

வயநாடு: '' பா.ஜ.,வின் எதிர்மறை சக்தி மற்றும் பிரசாரத்தால் மக்கள் நம்பிக்கை இழந்த நேரத்தில், எனது சகோதரர் ராகுல் 'பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்டார், '' என வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா கூறியுள்ளார்.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா பிரசார கூட்டத்தில் பேசியதாவது: ஏராளமான மக்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்டனர். என்ன செய்வது என தெரியாமல் இருந்தனர். பா.ஜ.,வின் பொய்பிரசாரம் மற்றும் அக்கட்சியின் எதிர்மறை சக்திக்கு எதிராக எப்படி போராட போகிறோம் என்ற பயத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் தான் ஒற்றுமை மற்றும் அமைதி என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொள்ள எனது சகோதரர் ராகுல் முடிவு செய்தார்.
இவ்வளவு தூரம் நடப்பதற்கு நீங்கள் தான் தைரியம் கொடுத்தீர்கள். வெறுப்பு, குழப்பம் மற்றும் பிரிவினை பரவிய நேரத்தில் அன்பு, சகோதரத்துவம் மற்றும் அமைதி பற்றி பேச இன்னும் 4 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்ள உங்களின் ஆதரவு தான் காரணம் ஆக இருந்தது. இவ்வாறு பிரியங்கா பேசினார்.