தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பா.ஜ., பதில் கூறியது ஏன்?

பா.ஜ., பதில் கூறியது ஏன்?

பா.ஜ., பதில் கூறியது ஏன்?


ADDED : ஜூன் 09, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2025 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனிடம் காங்., - எம்.பி., ராகுல் கேள்வி கேட்டார்; பா.ஜ.,விடம் அல்ல. ஆனால், அக்கட்சி வரிந்து கட்டி வந்து பதில் கூறியது ஏன்? தேர்தல் சந்தேகங்களை தீர்க்க, பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் ஏதாவது ஒப்பந்தத்தை வழங்கி உள்ளதா?

சஞ்சய் ராவத்

ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் தரப்பு

தெளிவுபடுத்த வேண்டும்!


பாரத மாதா யார் என்பதை கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் தெளிவுபடுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிடம் இருந்து தேச பக்தியை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் சுதந்திரத்துக்காக இந்த அமைப்பினர் சிறு துரும்பை கூட எடுத்து வைக்கவில்லை. 

டி.ராஜா

பொதுச்செயலர், இ.கம்யூ.,

எந்த பலனும் இல்லை!


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனினும், நாட்டு மக்கள் எந்த பலனும் அடையவில்லை. இந்த 11 ஆண்டுகளில், நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. பா.ஜ.,வின் சர்வாதிகார போக்கு தொடர்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே

தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us