sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்

/

டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்

டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்

டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்

9


UPDATED : ஜூன் 21, 2025 12:26 PM

ADDED : ஜூன் 20, 2025 07:10 PM

Google News

UPDATED : ஜூன் 21, 2025 12:26 PM ADDED : ஜூன் 20, 2025 07:10 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: '' கடவுள் ஜெகநாதரின் மண்ணுக்கு வர வேண்டும் என்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்தேன்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாரம்பரியம்

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜூன் 20 என்பது சிறப்பான நாள். இங்கு பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இன்று நடப்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது சேவைக்கு ஆர்ப்பணிக்கப்பட்டதற்கான கொண்டாட்டம் ஆகும்.

ஒடிசா என்பது வெறும் மாநிலம் மட்டும் அல்ல. அது இந்தியா பாரம்பரியத்தை ஒளிரும் நட்சத்திரமாக திகழ்கிறது. பல ஆண்டுகளாக இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை தாங்கி நிற்கிறது. இதனால்தான் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தில் ஒடிசாவின் பங்கு அதிகரிக்கிறது. பாரம்பரியம் என்பது இந்தியா வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் மாடல்

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் மாடல் ஆட்சியை மக்கள் பார்த்தனர். அப்போது சிறந்த நிர்வாகமோ அல்லது சாமானிய மக்கள் எளிதாக வாழ்வதற்கான வழிமுறை ஏதும் இல்லை. வளர்ச்சி திட்டங்களை தாமதப்படுத்துவதும், ஊழலை வளர்ப்பதுமே காங்கிரஸ் மாடலின் அடையாளமாக இருந்தது. ஆனால், சமீப நாட்களாக நாடு பா.ஜ., வின் வளர்ச்சி மாடலை பார்த்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நல்லாட்சி இல்லை.

அசாம், திரிபுரா நிலை

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் துவங்கி உள்ளது.கடந்த சில மாதங்கள் வரை அசாமில் நிலைமை மோசமாக இருந்தது. அங்கு ஸ்திரத்தன்மை இல்லை. வன்முறை கண்முன்னே தெரிந்தது. ஆனால், இன்று அந்த மாநிலம் வளர்ச்சி என்ற புதிய பாதையில் செல்கிறது.

அதேபோல் திரிபுராவில் பல ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி இருந்தது. அப்போது வளர்ச்சி என்ற அளவுகோளில் பின்தங்கி இருந்தது. உள்கட்டமைப்பும் மோசமாக இருந்தது. பா.ஜ.,வுக்கு மக்கள் முதல்முறையாக வாய்ப்பு கொடுத்ததும், அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உதாரணமாக திரிபுரா திகழ்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஜி7 மாநாட்டுக்காக கனடா சென்ற போது, என்னை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா வந்துள்ளீர்கள். வாஷிங்டன் வழியாக நாடு திரும்புமாறு கூறினார். விருந்து மற்றும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். ஆனால், நான் அதிபரிடம், உங்கள் அழைப்புக்கு நன்றி. புனிதமான ஜெகநாதரின் நிலத்திற்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக டிரம்ப்பின் அழைப்பை பணிவாக மறுத்தேன். உங்களின் அன்பும், ஜெகநாதர் மீதான பக்தியுமே என்னை இந்த மண்ணிற்கு வரவழைத்தது.


பக்தர்களுக்கு மரியாதை

பா.ஜ., ஆட்சி அமைந்ததும், புரி ஜெகநாதர் கோவிலின் நான்கு வாயில் கதவுகளும் திறக்கப்பட்டன. பொக்கிஷ அறையும் திறக்கப்பட்டன. இது அரசியல் வெற்றியோ அல்லது தோல்வியோ கிடையாது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மரியாதை அளித்து திறக்கப்பட்டது.

மோடியின் கியாரண்டி


2014 க்கு முன்பு 125 பழங்குடியின மாவட்டங்கள், நக்சல் வன்முறையின் பிடியில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டுகளில் பழங்குடியின சமுதாயத்தை வன்முறையில் இருந்து அகற்ற பணியாற்றினோம். அங்கு வளர்ச்சி என்ற புதிய பாதையை உருவாக்கினோம். நாட்டில் இருந்து நக்சலிசம் அழிக்கப்படும். இது மோடியின் கியாரண்டி. வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக பா.ஜ., அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் பயனாக , நக்சலைட்கள் சார்ந்த வன்முறை 20 மாவட்டங்களுக்குள் சுருங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

6வது முறை

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தததும், இங்கு பிரதமர் மோடி வருவது இது 6வது முறையாகும். இன்று நடந்த விழாவில் பிரதமர் மோடி ரூ.18,600 கோடி மதிப்பிலான 105 திட்டங்களை துவக்கி வைத்தார்.
குடிநீர் மற்றும் பாசன வசதி சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலை மற்றும் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்தார்.
மேலும், பயணிகள் ரயில் ஒன்றையும், புதிய ரயில் வழித்தடத்தையும் துவக்கி வைத்தார். தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களின்படி 100 மின்சார பஸ்களையும் துவக்கி வைத்தார். ஒடிசாவின் வளர்ச்சி குறித்த ஆவணத்தையும் வெளியிட்டார்.



ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர்

புவனேஸ்வரில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நடந்தது. கான்வாய் புடைசூழ பிரதமர் சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு பிரதமர் வழிவிட்டார்.








      Dinamalar
      Follow us