ரூ.40 கோடிக்கு மும்பை பங்களாவை விலை பேசும் கங்கனா
ரூ.40 கோடிக்கு மும்பை பங்களாவை விலை பேசும் கங்கனா
UPDATED : ஆக 05, 2024 10:12 AM
ADDED : ஆக 04, 2024 09:34 PM

மும்பை:
மும்பை பந்தராவில் உள்ள தனக்கு சொந்தமான பங்களாவை ரூ. 40 கோடிக்கு
விற்பனை செய்ய பாலிவுட் நடிகையும், பா.ஜ. எம்.பி.யுமான கங்கனா ரணாவத்
முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல் பிரதேசம் மாண்டி தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக வெற்றி பெற்றார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவருக்கு மும்பை பந்த்ராவில் ஆடம்பர சொகுசு பங்களா உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய சிவசேனா உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது சட்டவிரோத கட்டுமானம் கட்டியுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் சொகுசு பங்களாவை இடிக்க உத்தரவிட்டது. பங்களாவின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட நிலையில், கோர்ட்டில் கங்கனா தடைஉத்தரவு பெற்றார். பங்களா இடிக்கப்பட்டதை எதிர்த்து ரூ. 2 கோடி இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் அரசியலில்
குதித்து எம்.பி.யாக டில்லியில் தங்கியுள்ளதால், மும்பை பந்த்ரா பங்களாவை
ரூ. 40 கோடிக்கு விற்பனை செய்ய கங்கனா ரணாவத் முடிவு செய்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.