பெங்களூரு: பெங்களூரு கும்பார்பேட்டை ஹரி மார்க்கெட்டில், சமையல் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தியவர் சுரேஷ், 55. நேற்று முன்தினம் இரவு இவரது நண்பர் மகேந்திராவும், 68, கடையில் அமர்ந்து பேசி கொண்டு இருந்த போது குத்திக் கொல்லப்பட்டனர்.
ஹலசூரு கேட் போலீசார் பத்ரா, 55 என்பவரை கைது செய்தனர். கொலையான சுரேஷும், பத்ராவும் உறவினர்கள் ஆவர். இருவருக்கும் இடையில் சொத்து பிரச்னை இருந்து உள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு, சுரேஷுக்கு சாதகமாக வரும் நிலையில் இருந்தது. இதற்கிடையில் சுரேஷ் கூறியதால், பத்ராவை அவரது மனைவி பிரிந்து விட்டார்; விவாகரத்து வாங்கவும் முயற்சி செய்து வருகிறார்.
இதனால் சுரேஷ் மீது கோபத்தில் இருந்த பத்ரா, நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்து, சுரேஷை கத்தியால் குத்திக் கொன்றார். தடுக்க முயன்ற மகேந்திராவையும் தீர்த்துக்கட்டியது, பத்ரா அளித்த வாக்குமூலம் மூலம் தெரியவந்து உள்ளது.

