பெண்களுக்கு விரோதமாக ஏன் ஆகிவிட்டீர்கள்?: மம்தாவுக்கு பா.ஜ., கேள்வி
பெண்களுக்கு விரோதமாக ஏன் ஆகிவிட்டீர்கள்?: மம்தாவுக்கு பா.ஜ., கேள்வி
ADDED : பிப் 15, 2024 06:06 PM

புதுடில்லி: பெண்களுக்கு விரோதமாக ஏன் ஆகிவிட்டீர்கள்? என மம்தாவிடம் பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேற்குவங்க சட்டசபையில் மம்தா பேசுகையில், ‛‛ சந்தேஷ்காலி என்ற பகுதியில் பெண்கள் பாலியல் செய்யப்பட்டதாக தகவல் வந்ததும், மாநில மகளிர் ஆணையத்தின் பிரதிநிதிகளை உடனடியாக அனுப்பினேன். இந்த சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாருக்கும் நான் அநீதி இழைக்க அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிக்க மாட்டேன்'' எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இப்படிச் சொல்வது வெட்கக்கேடானது. ஊடகங்களுக்கு முன் நான் மம்தாவிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் பெண்களுக்கு விரோதமாக ஏன் ஆகிவிட்டீர்கள்?. பெண்கள் கவர்னரின் முன் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கின்றனர்.
இதற்கு ராகுலாக இருந்தாலும், இடதுசாரிகளாக இருந்தாலும், அல்லது மனித உரிமை அமைப்புகளாக இருந்தாலும் அமைதியாக உள்ளன. தேர்தல் நிதியில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலின் போது நன்கொடையாளர்கள் கூட ரகசியத்தை விரும்பினர். இவ்வாறு அவர் கூறினார்.

