காங்., ஆட்சியில் ஏழைகளின் நலனுக்காக ஏதும் செய்யவில்லை: நட்டா குற்றச்சாட்டு
காங்., ஆட்சியில் ஏழைகளின் நலனுக்காக ஏதும் செய்யவில்லை: நட்டா குற்றச்சாட்டு
UPDATED : பிப் 22, 2024 05:32 PM
ADDED : பிப் 22, 2024 05:28 PM

மும்பை: 'சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஏழைகளின் நலனுக்காக ஏதும் செய்யவில்லை' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காயத்ரி பரிவார் சார்பில் இன்று(பிப்.,22) நடைபெற்ற அஸ்வமேத காயத்ரி மகாயக்ஞத்தில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பங்கேற்றார். பின்னர் மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை நீண்ட காலம் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அவர்கள் ஏழைகளின் நலனுக்காக ஏதும் செய்யவில்லை. இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., பார்க்கப்படுகிறது. எங்கள் பொறுப்பும் அதிகரித்துள்ளது. இருளில் இருந்து ஒளியை அடைந்துள்ளோம்.
ஒரு காலத்தில் நாட்டில் 5 முதல் 6 அரசுகளை அமைத்து திருப்தி அடைந்தோம். இன்று 17 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இன்று மோடி அரசு ஏழைகளுக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. மஹாராஷ்டிராவில் ஊழல் நடந்ததா இல்லையா?. உத்தவ் ஆட்சியில் ஊழல் நடந்ததா இல்லையா? மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் சிறையில் இருந்தாரா இல்லையா? டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையை கண்டு ஏன் பயப்படுகிறார்?. இவ்வாறு அவர் பேசினார்.