UPDATED : மே 03, 2024 10:20 AM
ADDED : மே 03, 2024 08:17 AM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் ஏற்கனவே கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் காங்., முன்னாள் தலைவர் ராகுல் தற்போது உ.பி., மாநிலத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
சிட்டிங் எம்.பி.,யாக வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார் ராகுல். இதற்கான ஓட்டுப்பதிவு கடந்த ஏப்.26ல் நடந்தது. இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுவதால் ராகுல் வெற்றி பெறுவது கொஞ்சம் ' டப் ' ஆகவே உள்ளது. இடதுசாரி சார்பில் ஆனி ராஜா, பா.ஜ சார்பில் அம்மாநில தலைவர் சுரேந்திரன் தற்போது நல்ல ஓட்டு பெறுவார்கள் என்ற நிலையில் ராகுல் வெற்றி சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. இதனால் தன்னை பாதுகாத்திடவே ஏற்கனவே சோனியா போட்டியிட்ட ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார்.
இன்று(மே 03) வெளியிட்ட காங்., வேட்பாளர் பட்டியலில் பிரியங்கா பெயர் இல்லை. அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அமேதியில் காங்., வேட்பாளராக கிஷோரி லால் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுலின் வெற்றிக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன என கடந்த மார்ச் 25ல் தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.

