ராகுல் வியட்நாம் செல்வது ஏன்? பா.ஜ., தலைவர்கள் கேள்வி
ராகுல் வியட்நாம் செல்வது ஏன்? பா.ஜ., தலைவர்கள் கேள்வி
ADDED : மார் 16, 2025 06:36 AM

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன் தொகுதியை விட அதிக நேரம் வியட்நாம் நாட்டில் செலவிடுவது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:
ராகுல் எங்கு இருக்கிறார்? அவர் வியட்நாம் சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன்.
புத்தாண்டு பிறந்தபோது அங்கிருந்த ராகுல், 22 நாட்கள் வியட்நாமிலேயே செலவிட்டுள்ளார். தன் தொகுதியில் கூட அவர் இவ்வளவு நாட்கள் செலவிடுவதில்லை.
வியட்நாம் மீது ராகுலுக்கு திடீரென்று இவ்வளவு அன்பு இருப்பதற்கான காரணம் என்ன? அவர் லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர்.
இதை மறந்து அதிக நாட்கள் வியட்நாமில் செலவிடுவது ஏன்? இது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.