தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பிரதமர் மவுனம் ஏன்?

பிரதமர் மவுனம் ஏன்?

பிரதமர் மவுனம் ஏன்?

1


ADDED : ஜூலை 11, 2026 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 01:04 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அயோத்தியில், ராமர் கோவில் அறக்கட்டளை பிரதமர் மோடியின் மேற்பார்வையிலேயே உருவாக்கப்பட்டது. அப்படியிருக்கையில், நன்கொடைகள் திருடப்பட்டதற்கு யார் பொறுப்பு? இது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? இந்த முறைகேடு தொடர்பாக, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.

- கே.சி.வேணுகோபால், பொதுச்செயலர், காங்கிரஸ்

இணைப்புக்கே இடமில்லை!


தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சியை காங்கிரசுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஊடகங்களில் இது தொடர்பாக பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. இது பற்றி காங்கிரசுடன் நாங்களும் பேசவில்லை. அக்கட்சியும் எங்களுடன் பேசவில்லை. இரு கட்சிகளும் கூட்டணி வைத்தே செயல்படுவோம்.

- சுப்ரியா சுலே, லோக்சபா எம்.பி., - தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சி

அரசியல் கட்சிகளால் அல்ல!


ஆஸ்திரேலியா உடனான யுரேனியம் ஒப்பந்தம், காங்., ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவு என்றால், அந்நாடு நமக்கு யுரேனியம் வழங்காதது ஏன்? ஒவ்வொரு அரசும் காந்தி- - வாத்ரா குடும்பத்தின் தனியார் நிறுவனம் போல செயல்படுவதில்லை. சர்வதேச ஒப்பந்தங்கள் அரசியல் கட்சிகளால் அல்ல, அரசுகளால் கையெழுத்திடப்படுகின்றன.

- பிரதீப் பண்டாரி, தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us