
இதுவரை ஏராளமான பெண்கள், 'மிஸ் இந்தியா' பட்டம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் ஒருவர் கூட தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. இது பற்றி யாரும் விவாதிக்காதது ஏன்?
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை!
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் தலைவர்கள் தலித் சமூகத்தினருக்கு ஆதரவாக இருப்பது போல் நாடகமாடுகின்றனர். அவர்களது இரட்டை வேடம், உ.பி., மக்களிடையே அம்பலமாகி விட்டது. இனி எந்த காலத்திலும், இந்த இரு கட்சிகளுடனும் தேர்தல் கூட்டணி இல்லை.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
ராகுலின் பதில் என்ன?
அரசியலமைப்பு சட்டத்தின் மீது ராகுலுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அந்த கட்சி, நம் நாட்டுக்கு இரண்டு சட்டங்கள் தேவை என்கிறது. இதற்கு ராகுலின் பதில் என்ன?
ஷாஜாத் பூனாவல்லா, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

