ADDED : ஜன 30, 2025 01:24 AM

10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமானவை. இதை மோசடி இல்லாமல் நடத்த வேண்டும். தேர்வு எழுதும் மாணவியர் புர்கா அணிய அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் மோசடி செய்கின்றனரா என்பதை கண்டறிவது கடினம்.
நிதேஷ் ரானே
மஹாராஷ்டிரா அமைச்சர், பா.ஜ.,
யமுனை நீரை குடித்தேன்!
டில்லி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த ஹரியானா அரசு யமுனை நதியில் நஞ்சை கலந்ததாக பெரிய பொய்யை கெஜ்ரிவால் கூறியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய செயலில் அவர் இறங்கியுள்ளார். அது பொய் என நிரூபிக்க நானே யமுனை நதிக்கு வந்து, அந்த நீரை கையால் எடுத்து பருகினேன்.
நயாப் சிங் சைனி
ஹரியானா முதல்வர், பா.ஜ.,
வெள்ளை அறிக்கை வேண்டும்!
நிடி ஆயோக் அறிக்கையின்படி 2022ல் 4வது இடத்தில் இருந்த மஹாராஷ்டிரா வின் நிதி நிலை குறியீடு, தற்போது ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. தொழில் துவங்குவதும் இங்கு கடினமாகி உள்ளதாகக் கூறியுள்ளனர். எனவே மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சுப்ரியா சுலே
லோக்சபா எம்.பி., - சரத்பவார் தேசியவாத காங்கிரஸ்

