sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முருகா மடத்தை பிடிக்க எதற்கு அவசரம்? சிவமூர்த்தி சரணருக்கு ஐகோர்ட் கேள்வி!

/

முருகா மடத்தை பிடிக்க எதற்கு அவசரம்? சிவமூர்த்தி சரணருக்கு ஐகோர்ட் கேள்வி!

முருகா மடத்தை பிடிக்க எதற்கு அவசரம்? சிவமூர்த்தி சரணருக்கு ஐகோர்ட் கேள்வி!

முருகா மடத்தை பிடிக்க எதற்கு அவசரம்? சிவமூர்த்தி சரணருக்கு ஐகோர்ட் கேள்வி!


ADDED : ஜன 10, 2024 12:17 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'நிபந்தனை ஜாமின் பெற்று, சிறையில் இருந்து வெளியே வந்த உங்களுக்கு ஏன் அதற்குள் அதிகார ஆசை?' என, சித்ரதுர்கா முருகா மடத்தின் சிவமூர்த்தி சரணருவிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சித்ரதுர்காவின் முருகா மடம், கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற மடங்களில் ஒன்று. மடம் சார்பில் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சில மாணவியரை, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, 65 பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, சில மாணவியர் மைசூரின் ஒடனாடி தொண்டு அமைப்பின் உதவியுடன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவமூர்த்தி முருகா சரணருவை கைது செய்தனர். இவர் சித்ரதுர்கா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மாதக்கணக்கில் சிறையில் இருந்த இவருக்கு, சமீபத்தில்தான் கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. சிறையில் இருந்து வெளியே வந்ததும், மடத்தின் எஸ்.ஜெ.எம்., வித்யா பீடத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை மீறியதாக, முருகா மடத்தின் நிர்வாக இயக்குனர் நாகராஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வராலே, நீதிபதி கிருஷ்ண தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தனஞ்செய ஜோஷி, “மடத்தின் நிர்வாகம் தொடர்பாக, இதே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சிவமூர்த்தி முருகா சரணரு மீறியுள்ளார்,” என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

சரணரே! உங்களுக்கு ஏன் இந்த அதிகார அவசரம்? குற்றசாட்டுகளில் இருந்து விடுபடும் வரை, மடத்தின் நிர்வாகத்தில் இருந்து, விலகியிருப்பது நல்லதில்லையா? மடத்தின் நிர்வாக பொறுப்பை, மாவட்ட தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கும்படி, உயர்நீதிமன்றம் கூறவில்லையா?

ஒருவேளை மாவட்ட தலைமை நீதிபதி, மடத்தின் நிர்வாகத்தை சரியாக கவனிக்கவில்லை என்றால், அதை பார்த்துக்கொள்ள நாங்கள் இல்லையா; உங்களுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?

நீங்கள் தேர்தல் மூலமாக வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்திருந்தால், சரி என கூறியிருக்கலாம். ஆனால் நீங்கள் அப்படி தேர்வு செய்யப்படவில்லையே. நீங்கள் இன்று முதல் மடத்தின் எந்த விஷயங்களிலும் முடிவு எடுக்கக் கூடாது. வெறும் அன்றாட விவகாரங்களில் மட்டும் பங்கு பெறுங்கள்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்வேளையில் சிவமூர்த்தி சரணரு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் உதய் ஹொள்ளா, “இந்த விஷயத்தில், பிரதிவாதிகள் சார்பில் நான் நீதிமன்றத்துக்கு உறுதியளிக்கிறேன். மடத்தின் எந்த விஷயத்திலும், முடிவு எடுக்கக் கூடாது என்பதை, சரணருக்கு புரிய வைக்கிறோம்,” என்றார்.

அதன்பின் விசாரணை பிப்ரவரி 5க்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us