விளக்குக்கு வீண் செலவு எதற்கு? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய அகிலேஷ்
விளக்குக்கு வீண் செலவு எதற்கு? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய அகிலேஷ்
UPDATED : அக் 20, 2025 01:22 AM
ADDED : அக் 20, 2025 01:15 AM

லக்னோ: 'தீபாவளி கொண்டாட்டத்தில் விளக்குகள் வாங்கி வீண்செலவு செய்ய வேண்டாம்' என, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியிருப்பதற்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
உத்தர பிரதேத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள லக்னோவில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை அப்போது பேசிய அவர், 'உலகம் முழுதும், அனைத்து நகரங்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஒளிரும்; அது பல மாதங்களுக்கு நீடிக்கும்.
'இவற்றி ல் இருந்து நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். பண்டிகையில், விளக்குகள், மெழுகுவர்த்திகள் போன்றவற்றிக்கு ஏன் செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
இது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்' என்றார்.
இதற்கு, ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ், ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளியின் போது, கிறிஸ்துமஸ் குறித்து புகழ்ந்து பேசுகிறார்.
கோடிக்கணக்கான ஹிந்துக்கள் கொண்டாடும் இந்த பண்டிகையின் போது, விளக்குகளுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம் என சொல்கிறார்.
யாதவ சமூகத்தைச் சேர்ந்த அவர், ஹிந்துக்களை விட கிறிஸ்துவர்களை அதிகம் நேசிக்கிறார்.
அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார். பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகையைவிட வெளிநாட்டு பண்டிகைகளை துாக்கி பிடிக்கிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பிருந்தே, காலம்காலமாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையை கொண்டா டாமல், இரு மாதங்களுக்கு பின் வரும் கிறிஸ்துமஸ் குறித்து கூறி, விளக்குகள் தயாரிக்கும் குயவர்களை அகிலேஷ் அவமதிக்கிறார்.
எதிர்ப்பு அ யோத்தியின் பிரகாசம் மற்றும் ஹிந்துக்களின் கொண்டாட்டம் மீதான பொறாமை சரியல்ல. இதனால், அவரின் சமாஜ்வாதி கட்சியை மக்கள், சமூக விரோதக் கட்சி என கூறுகின்றனர். இவ் வாறு அவர் கூறினார்.
அகிலேஷ் யாதவின் கருத்துக்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.