ADDED : ஜன 01, 2025 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே, கோடை காலம் துவங்கியது. வெயில் சுட்டெரித்தது. கடந்த 2023ல் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், நீர்நிலைகள் வேகமாக வறண்டன. பெங்களூரின் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்ததால், பெங்களூரில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடியது.
அதிக விலை கொடுத்து, டேங்கர் தண்ணீரை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நேரத்தில் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர், குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய துரித நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக குடிநீர் பிரச்னை கட்டுக்குள் வந்தது. தென்மேற்கு பருவமழை பெய்ததும் நிலைமை சீரானது.

