ADDED : பிப் 15, 2024 05:24 AM

தங்கவயல் : தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை சஞ்சய் காந்தி நகரை சேர்ந்தவர் பவித்ரா, 27. இவரும், கோரமண்டல் வடக்கு டாங்க் பிளாக் பகுதியை சேர்ந்த லோகேஷ், 32 என்பவரும் 7 ஆண்டுகளுக்கு முன்காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். கடந்த ஏழு மாதங்களாக கணவர், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பவித்ரா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
லோகேஷ் மீது வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வருவதாக, உரிகம் போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில்,லோகேஷிடம் மகனும், பவித்ராவிடம் மகளும் உள்ளனர். பவித்ரா, உறவினர்கள் உதவியுடன் மகனை அடிக்கடி பார்க்கசெல்வது வழக்கம்.
அதேபோல நேற்று மாலை வடக்கு டாங்க் பிளாக் பகுதியில் மகனை பார்க்க சென்ற போது,அங்கு கத்தியுடன் இருந்த லோகேஷ், பவித்ரா கழுத்தை கத்தியால்வெட்டியுள்ளார். அதே இடத்தில் பவித்ரா ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.
கணவர் லோகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

