முதலாளியுடன் உறவுக்கு மறுப்பு: மனைவிக்கு 'முத்தலாக்'
முதலாளியுடன் உறவுக்கு மறுப்பு: மனைவிக்கு 'முத்தலாக்'
ADDED : டிச 25, 2024 06:47 AM

மும்பை: தன் முதலாளியுடன் உறவுக்கு மறுத்ததால், மனைவிக்கு, 'முத்தலாக்' கொடுத்து விவாகரத்து செய்த, மும்பை கம்ப்யூட்டர் இன்ஜினியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கல்யாணைச் சேர்ந்த 26 வயது முஸ்லிம் பெண், போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதனடிப்படையில், அவருடைய கணவர் சோஹைல் ஷேக், 45, மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பெண்ணை, சோஹைல் ஷேக் கடந்த ஜனவரியில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
தன் முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்காக, மாதம் 15 லட்சம் ரூபாயை பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படி, இரண்டாவது மனைவிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன் அலுவலக முதலாளியுடன் உறவு கொள்ளும்படி, அந்தப் பெண்ணை அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். மறுத்ததால், அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், முத்தலாக் கூறி, விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண், தன் கணவருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரிப்பதாகவும், இதுவரை கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மும்பை போலீசார் கூறியுள்ளனர்.

