தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மனைவி கொலை; கணவர் சரண் 

மனைவி கொலை; கணவர் சரண் 

மனைவி கொலை; கணவர் சரண் 


ADDED : செப் 30, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலபுரகி : ஆசைக்கு இணங்க மறுத்ததுடன், மர்ம உறுப்பை துண்டித்து விடுவேன் என்று கூறியதால், மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற, கணவர் போலீசில் சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார்.

கலபுரகியின் சேடம் படகேரா கிராமத்தில் வசித்தவர் ஷேகப்பா, 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகம்மா, 42. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் வேறு ஊரில் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு ஆசைக்கு இணங்கும்படி மனைவியிடம், கணவர் கேட்க, அவர் மறுத்து உள்ளார்.

கோபம் அடைந்த கணவர், 'தினமும் இரவு இரண்டு முறை, எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவேன்' என்று மிரட்டினார். ஆனால் பயப்படாத மனைவி, 'உனது மர்ம உறுப்பை துண்டித்து விடுவேன்' என்று, கணவரிடம் கூறி இருக்கிறார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின், இருவரும் துாங்க சென்றனர்.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, துாக்கத்தில் இருந்து கண்விழித்த ஷேகப்பா, துாங்கி கொண்டு இருந்த மனைவியை பார்த்து ஆத்திரம் அடைந்தார். கயிற்றை எடுத்து கழுத்தை இறுக்கியும், கோடாரியால் வெட்டியும் கொலை செய்தார். பின், சேடம் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி, சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us