தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மனைவியை கொன்றவர் 40 ஆண்டுக்கு பின் கைது

 மனைவியை கொன்றவர் 40 ஆண்டுக்கு பின் கைது

 மனைவியை கொன்றவர் 40 ஆண்டுக்கு பின் கைது


ADDED : ஏப் 23, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 07:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:மனைவியை கொன்று, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்.

பீஹாரின் நாளந்தா என்ற இடத்தில், 40 ஆண்டுகளுக்கு முன், இந்த சம்பவம் நடந்தது. 1986ல், தன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில், அவரை கொன்றார், சந்திரசேகர் பிரசாத் என்ற, அப்போது, 40 வயதான நபர். கல்லால் அந்த பெண்ணின் முகத்தில் தாக்கி, அவரை கொன்ற அவர், போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பியோடினார்.

கிழக்கு டில்லியின் ஷாகர்புர் என்ற இடத்தில் நடந்த இந்த கொலை வழக்கு தொடர்பாக, போலீசார் சந்திரசேகர பிரசாத்தை தேடி வந்தனர். இருப்பிடம் மற்றும் பெயரை அவ்வப்போது மாற்றி வந்த அவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த, 1987 ல் இவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பதை அறிய முடியாமல், போலீசார் திணறினர். எனினும், அவர் தொடர்பான வழக்கை மூடாமல், உயிரோட்டமாகவே வைத்திருந்தனர்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவர், பீஹார், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டில்லி என தன் இருப்பிடத்தை மாற்றி வந்ததால், அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறினர்.

இந்நிலையில், டில்லி அருகே உள்ள அலிப்பூரில், தொழிற்சாலை ஒன்றில் அவர் பணியாற்றி வருவதாக அறிந்த போலீசார், நேற்று காலையில் அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், 40 ஆண்டுகளுக்கு முன், மனைவியை கொன்றதற்காக போலீசாரால் தேடப்படும் நபர் என்பதை அறிந்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us