கோவில் வளாகத்தில் வலம் வந்த காட்டு யானை: பக்தர்கள் அதிர்ச்சி
கோவில் வளாகத்தில் வலம் வந்த காட்டு யானை: பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : டிச 03, 2024 12:47 AM

மங்களூரு : கர்நாடகாவில், புகழ்பெற்ற குக்கே சுப்பிரமணிய கோவில் வளாகத்தில் வலம் வந்த காட்டு யானையால் பக்தர்கள் பீதி அடைந்தனர்.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டி குக்கே சுப்பிரமணிய கோவில் அமைந்துஉள்ளது.
இங்கு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, கோவில் வளாகம் அருகே காட்டு யானை ஒன்று திடீரென வலம் வந்தது.
முதலில், இது கோவில் யானை என கருதி, பக்தர்கள் சிலர் ஆசிர்வாதம் வாங்க முயன்றனர்.
ஆனால், அங்கு இருந்த கோவில் நிர்வாகிகள், அது காட்டு யானை எனக்கூறி அவர்களை தடுத்து நிறுத்தியதுடன், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், உள்ளூர் மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன், கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்த காட்டு யானையை பின்தொடர்ந்து சென்று, அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவில் வளாகம் அருகே வனப்பகுதி இருப்பதால், யானை மீண்டும் வரக்கூடும் என்றும், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கோவில் நிர்வாகிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்திஉள்ளனர்.