ADDED : ஜன 10, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனேக்கல்: சட்ட விரோதமாக வனவிலங்கு இறைச்சி விற்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆனேக்கல் பசவனபூரை சேர்ந்த சத்யபிரகாஷ், 38 வெங்கடேஷ், 43, ஆகிய இருவரும், ஹனுார் வனப்பகுதியில் உள்ள மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றிகளை வேட்டையாடி உள்ளனர். மேலும், அதன் இறைச்சிகளை கொண்டு வந்து பசவனபூர் கிராமத்தில் விற்பனை செய்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதன்படி, வனத்துறை அதிகாரிகள், அவர்களின் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடம் இருந்து காட்டுப்பன்றியின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான ஜான் பீட்டர் என்பவரை, அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

