வருவேன்... திரும்ப வருவேன்னு சொல்லு: கெஜ்ரிவால் கடிதம்
வருவேன்... திரும்ப வருவேன்னு சொல்லு: கெஜ்ரிவால் கடிதம்
ADDED : மார் 23, 2024 03:54 PM

புதுடில்லி: என்னை நீண்ட நாட்கள் சிறையில் வைத்து இருக்க முடியாது. விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்'' என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டில்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர், டில்லி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அக்கடிதத்தை கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா நிருபர்களிடம் வாசித்துக்காட்டினார்.
அக்கடிதத்தில் கெஜ்ரிவால் கூறியதாவது: சமுதாயத்திற்காக தொடர்ந்து உழையுங்கள். பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் உட்பட யாரையும் வெறுக்க வேண்டாம். அவர்களும் நமது சகோதரர்களே. நாட்டை பலவீனப்படுத்தும் சக்திகள் இந்தியாவிற்குள்ளும், வெளியேயும் உள்ளன. நீண்ட காலம் என்னை சிறையில் வைத்து இருக்க முடியாது. விரைவில் வெளியே வந்து, எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

