ADDED : மே 06, 2025 12:45 AM

சர்வதேச எல்லையில், நம் நாட்டுக்கு எதிராக
பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வந்தால், உலக அரசியலில் இருந்து அந்நாடு
துடைத்தெறியப்படும். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு, சரியான
நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
அனுராக் தாக்குர்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
மன்னிப்பு கேட்க வேண்டும்!
அசாம் பெண்கள் குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்த கருத்துகளை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். சுதந்திர போராட்டம் முதல் தற்போது வரை, அசாம் மாநிலத்திற்கு பெண்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
கவுரவ் கோகோய்
லோக்சபா எம்.பி., - காங்.,
வழிபடுவது குற்றமா?
ஒடிஷாவின் புரி ஜெகநாதர் கோவிலில் உள்ள வேப்ப மரங்களை திருடி, மேற்கு வங்கத்தின் திகாவில் ஜெகநாதர் கோவில் சிலைகள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவது ஆதாரமற்றது. நாங்கள் ஏன் திருடப்பட்ட வேப்ப மரத்தை பயன்படுத்த வேண்டும்? மேற்கு வங்கத்தில் ஜெகநாதரை வழிபடுவது குற்றமா?
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

