தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கவர்னர் ஆகிறாரா கட்கரி?

கவர்னர் ஆகிறாரா கட்கரி?

கவர்னர் ஆகிறாரா கட்கரி?


ADDED : செப் 28, 2025 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 07:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லி அரசியல் வட்டாரங்களில் வதந்திகளுக்கு பஞ்சம் கிடையாது. தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சம்பந்தப்பட்டது.

இவர் ஓரம் கட்டப்பட்டுவிட்டார். மத்திய அமைச்சர்கள் சிலர் கவர்னர்களாக அனுப்பப்பட உள்ளனர். அந்த பட்டியலில் கட்கரி பெயரும் உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்த வேண்டும் என, ஒரு திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்தினார் கட்கரி. இதனால் பெட்ரோல் இறக்குமதி குறையும். சுற்றுச்சூழல் மேம்படும். கரும்பு விவசாயிகள் பயனடைவர் என்பது கட்கரியின் வாதம்.

இதனால், கட்கரிக்கு எதிராக செய்திகள் வர ஆரம்பித்தன. இவருடைய இரண்டு மகன்களும் எத்தனால் தொழிற்சாலை நடத்துகின்றனர். அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார் என செய்திகள் வெளியாகின.

'எனக்கு எதிராக பெட்ரோல் லாபி செயல்படுகிறது. என் மகன்கள் தொழிற்சாலை நடத்துவது உண்மைதான். அவர்களுக்கு நான், 'அட்வைஸ்' மட்டுமே செய்கிறேன். எத்தனால் விவகாரம் குறித்து முடிவெடுப்பது மத்திய அமைச்சரவை தான்' என, விளக்கம் அளித்துள்ளார் கட்கரி.

தன் சொந்த ஊரான நாக்பூரிலேயே கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறும். அப்போது கட்கரி மாற்றப்படுவார் என மீடியாவில் செய்திகள் கசியவிடப்படுகின்றன.

ஏற்கனவே மோடிக்கும், கட்கரிக்கும் ஆகாது என சொல்லப்படுகிறது. ஆனால், இவருக்கு ஆர்.எஸ்.எஸ்., பலத்த ஆதரவு அளித்து வருகிறது. எனவே, கட்கரி மீது மோடி கை வைக்க மாட்டார் எனவும் ஒரு சாரார் சொல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us