காங்கிரஸில் நடக்குமா.. தமிழக கட்சிகளில் நினைத்துப் பார்க்க முடியுமா... கமென்ட் செய்யுங்க வாசகர்களே!
காங்கிரஸில் நடக்குமா.. தமிழக கட்சிகளில் நினைத்துப் பார்க்க முடியுமா... கமென்ட் செய்யுங்க வாசகர்களே!
UPDATED : ஜன 21, 2026 10:21 PM
ADDED : ஜன 20, 2026 11:04 PM

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியிலும், தமிழக கட்சிகளிலும் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று பாஜ கட்சியில் நடந்துள்ளது. இது பற்றி வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
பாஜ கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவி ஏற்றார். இதன் மூலம் மிக இளம் வயதில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சாதனையைப் படைத்தார் நிதின் நபின். அவரது பதவியேற்பின் போது நடந்த நிகழ்வுகள், பாஜ உண்மையிலேயே வித்தியாசமான அரசியல் கட்சி என்பதை உலகுக்கு பறைசாற்றுவதாக இருந்தன.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபினை, பிரதமர் மோடி, பதவி விலகும் கட்சியின் தலைவரான நட்டா ஆகியோர் இணைந்து தலைவர் நாற்காலியில் அமர வைத்தனர். அவர்கள் மட்டுமின்றி, கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஆன ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, அமித் ஷா ஆகியோரும் சேர்ந்து புதிய தலைவரை நாற்காலியில் அமர வைத்தனர்.
கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரைக் காட்டிலும் நிதின் நபின் வயதில் இளையவர். எனினும் அவரது பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவரும், அவரை தலைவர் நாற்காலியில் அமர வைக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிதின் நபின், எந்த அரசியல் பின்புலமும் இன்றி பாஜ கட்சியில் இணைந்தவர். அவர் படிப்படியாக முன்னேறி கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அப்படி தேர்வானவரை தங்களை விட வயதில் இளையவராக இருந்தாலும், கட்சிப் பணி, அனுபவத்தில் இளையவராக இருந்தாலும், பிரதமரும் முன்னாள் தலைவர்களும் இணைந்து தலைவர் நாற்காலியில் அமர்த்தி உள்ளனர். இதுதான் மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து பாஜ கட்சியை வேறுபடுத்துவதாக உள்ளது.
இத்தகைய ஒரு தலைமை மாற்றம் என்பது, காங்கிரஸ் கட்சியிலும், தனிநபர் வழிபாடு நடத்தப்படும் தமிழக கட்சிகளிலும் நடந்திராத ஒன்று. நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று என்றும் கூறலாம்.
கருத்து சொல்லுங்க வாசகர்களே?
பாஜக கட்சியில் நடந்துள்ள இத்தகைய தலைமை மாற்றம், தமிழக கட்சிகளிலோ, காங்கிரஸ் கட்சியிலோ நடக்குமா, இது பற்றி உங்கள் கருத்து என்ன, பதிவு செய்யுங்கள் வாசகர்களே!

