தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா

விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா

விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா

1


ADDED : செப் 07, 2026 11:28 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : செப் 07, 2026 11:28 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வங்கதேசம் திரும்பிய பிறகு, மீண்டும் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திப்பேன் என்று இந்தியால் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; சொந்த நாட்டை விட்டு நான் விருப்பத்தின் பேரில் வெளியேறவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக, கட்சி நிர்வாகிகளும், குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலால் தான் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவும், 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஹெலிகாப்டரில் ஏறும் போது தான், இந்தியாவுக்கு செல்வதே எனக்கு தெரிய வந்தது. இந்தியா சென்றடைந்ததும், எனக்கு தேவையான பாதுகாப்பை அவர்கள் வழங்கினார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், சொந்த நாட்டை விட்டு வெளியேறியது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

இந்தியாவை விட்டு வேறு எந்த நாட்டிற்கு செல்லும் திட்டம் ஏதும் எனக்கு இல்லை. நான் மீண்டும் என்னுடைய மக்களுக்காக என் தாயகத்திற்கு திரும்புவேன். இந்த காலகட்டத்தில் பிரதமர் மோடியை நான் சந்திக்க முயலவில்லை. என்னுடைய நாட்டிற்கு சென்று விட்டு, நிலைமை சீரடைந்த பிறகு, மீண்டும் இந்தியா வந்து அவரை சந்திப்பேன். வங்கதேச அரசு என்னை திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், என்னை அவர்கள் அனுப்பத் தேவையில்லை. நானே வங்கதேசம் வருவேன்.

நான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியால் இந்தியா - வங்கதேச உறவில் எவ்வாறு விரிசல் ஏற்படும்? உண்மை மற்றும் பேச்சுரிமை எதற்காக அஞ்சப்படுகிறது என்பதே உண்மையான கேள்வி? 2007ல் இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் எனக் கூறிய தாரிக் ரஹ்மான், லண்டனில் இருந்தபடி, பிஎன்பி கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, ஆன்லைன் மூலமாக தொடர்ந்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். நாங்கள் பிரிட்டன் அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினோமா? ஒருவரின் குரலை ஒடுக்க மற்றொரு நாட்டிடம் அனுமதி கோர முடியாது.

என் மீதான மற்றும் கட்சித் மீதான தடையை நீக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவாமி லீக்கை யார் வழிநடத்த வேண்டும் என்பதை அரசாங்கமோ அல்லது பிஎன்பி கட்சியோ தீர்மானிக்க முடியாது. எனது கட்சி விரும்பினால் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார், இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us