தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தலித் மக்கள் சமையலறை; வீடியோ வெளியிட்டார் ராகுல்

தலித் மக்கள் சமையலறை; வீடியோ வெளியிட்டார் ராகுல்

தலித் மக்கள் சமையலறை; வீடியோ வெளியிட்டார் ராகுல்


ADDED : அக் 07, 2024 02:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 02:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தலித் சமூக மக்கள் சமையலறை எப்படி இருக்கும் என்பது குறித்து சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த, அஜய் துக்காராம் சனதே மற்றும், அஞ்சனா துக்காராம் சனடே என்பவரின் வீட்டில் மதிய உணவு சமைத்து சாப்பிட்ட வீடியோவை ராகுல் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்றும் தலித் சமூக மக்கள் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும்.

தலித் சமூக மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், அஜய் துக்காராம் சனதே மற்றும், அஞ்சனா துக்காராம் சனடே உடன் மதிய உணவை சமைத்து சாப்பிட்டேன். அவரது வீட்டிற்கு என்னை மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு வாய்ப்பளித்தார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து 'ஹர்ப்யாச்சி பாஜி' (harbharyachi bhaji) என்ற கறியை தயாரித்தோம். அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் பாதுகாப்போம். ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் சமத்துவம் சாத்தியமாகும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us