நீட் தேர்வில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் மன்னிப்பு கேட்பாரா?: பா.ஜ., கேள்வி
நீட் தேர்வில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் மன்னிப்பு கேட்பாரா?: பா.ஜ., கேள்வி
ADDED : ஜூலை 24, 2024 12:34 PM

புதுடில்லி: ' நீட் தேர்வில் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு, ராகுல் மன்னிப்பு கேட்பாரா?' என பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் கண்ணியத்தை ராகுல் மீறி வருகிறார். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, அரசு தேர்வில் நம்பிக்கையின்மையை ராகுல் தூண்டினார்.
மன்னிப்பு
நீட் மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்பாரா?. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது வினாத்தாள் கசிவுகள் அதிகமாக நடந்தன. தற்போது வினாத்தாள் கசிவை தடுக்க பா.ஜ., அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.