தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ விரைவில் பதிலடி: ராஜ்நாத்

விரைவில் பதிலடி: ராஜ்நாத்

விரைவில் பதிலடி: ராஜ்நாத்


ADDED : ஏப் 24, 2025 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 12:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, முப்படை தளபதிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திரிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.கே.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ராஜ்நாத் சிங், ஜம்மு - -காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், முப்படைகளும் போருக்கு தயாராகும் நிலையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் முப்படைத் தளபதிகளிடம் கூறினார்.

இதன் பிறகு, டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “பஹல்காமில் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மட்டும் எங்கள் இலக்கு கிடையாது. திரைமறைவில் இருந்தபடி, இந்திய மண்ணில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலை செயல்படுத்த சதி செய்தவர்களும் எங்கள் இலக்கு.

''இந்த விஷயத்தில் தேவையான, பொருத்தமான, மிகச் சரியான பதிலடி விரைவில் தரப்படும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். பயங்கரவாதத்தை பூஜ்ஜியம் அளவுக்குக் கூட சகித்துக் கொள்ள முடியாது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us