சாம்ராட் சவுத்ரிக்கு முதல்வர் பதவியா? அமித் ஷா பேச்சால் பீஹாரில் சலசலப்பு
சாம்ராட் சவுத்ரிக்கு முதல்வர் பதவியா? அமித் ஷா பேச்சால் பீஹாரில் சலசலப்பு
ADDED : அக் 30, 2025 11:48 PM

பாட்னா:  ''பீ ஹார் சட்டசபை தேர்தலுக்கு பின், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மிகப்பெரிய ஆளாக மாற்றி, உயர்ந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைப்பார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது, ஆளும் தே.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏ ற்படுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் கு மார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், தாராபூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.,வைச்  சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியை ஆதரித்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று பேசியதாவது:
தாராபூர் தொகுதியில் சாம்ராட் சவுத்ரி போட்டியிட வேண்டும் என்பதற்காக, ஐக்கிய ஜனதா தளத்தை சமாதானப்படுத்தி விட்டுக்கொடுக்க வைத்தோம்.
தங்கள் எம்.எல்.ஏ.,க்களை அமைச்சர்களாக ஆக்குங்கள் என, மற்ற இடங்களில் மக்கள் கோருவர். ஆனால் இங்கு, துணை முதல்வரே களத்தில் உள்ளார். சாம்ராட் சவுத்ரியை வெற்றி பெற செய்யுங்கள். தேர்தல் முடிந்ததும், அவரை மிகப்பெரிய ஆளாக மாற்றி உயர்ந்த இடத்தில் பிரதமர் மோடி வைப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் மூலம், முதல்வர் வேட்பாளராக சாம்ராட் சவுத்ரியை பா.ஜ., முன்னிறுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 'தே.ஜ., கூட்டணி வென்றால், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார்.
'அவரை முதல்வராக்க பா.ஜ., விரும்பாது' என, காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி பிரசாரம் செய்து வரும் நிலையில், அமித் ஷாவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

