இந்தியாவில் இன்னும் சில நாட்கள் தங்குகிறார் ஷேக் ஹசீனா?
இந்தியாவில் இன்னும் சில நாட்கள் தங்குகிறார் ஷேக் ஹசீனா?
ADDED : ஆக 07, 2024 09:14 AM

புதுடில்லி: ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதில் உள்ள பிரச்னை காரணமாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இன்னும் சில நாட்கள் தங்கி இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் எழுந்த மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். சில சிக்கல்கள் காரணமாக அது தடைபட்டு உள்ளது. ஐரோப்பாவில் ஏதாவது ஒரு நாட்டில் அவருக்கு பாதுகாப்பான அடைக்கலம் கிடைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பலன் கிடைக்கும் வரை இந்தியாவில் தங்கியிருக்க ஹசீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எப்படி பாதுகாப்பது என்பது ஒத்திகை நடத்தி பார்க்கும் அதிகாரிகள், பிரதமர் மோடியை சந்திக்க வைக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அது எப்போது, எங்கு என்பது குறித்து திட்டம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதுடன், ஹசீனாவின் திட்டங்கள், வேறு நாட்டிற்கு செல்லும் அவரின் முயற்சிகள் உள்ளிட்ட தகவல்களை பிரதமர் மோடிக்கு அவர் தொடர்ந்து அளித்து வருகிறார்.