ADDED : பிப் 13, 2024 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரேபரேலி தொகுதியில், மகள் பிரியங்காவை களமிறக்க சோனியா முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி., யாக, 2006 முதல், இருந்து வரும் காங்., முன்னாள் தலைவர் சோனியா, 77, வயது மூப்பு காரணமாக, உடல்நலப் பிரச்னைகளை சந்தித்துவருகிறார்.
இதனால் அவர், ராஜஸ்தான் அல்லது ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அவருக்கு பதில், அவரது மகள் பிரியங்காவை ரேபரேலியில் களமிறக்க உள்ளதாகவும் தகவல் பரவிஉள்ளது.