தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விஜயின் அறிவுரையை ஏற்பார்களா மாணவர்கள்?: அந்துமணி பதில்கள்

விஜயின் அறிவுரையை ஏற்பார்களா மாணவர்கள்?: அந்துமணி பதில்கள்

விஜயின் அறிவுரையை ஏற்பார்களா மாணவர்கள்?: அந்துமணி பதில்கள்

5


UPDATED : நவ 09, 2026 04:31 AM

ADDED : நவ 09, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

5

UPDATED : நவ 09, 2026 04:31 AM ADDED : நவ 09, 2026 04:30 AM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வே.சரஸ்வதி, பாலக்காடு:

'மாணவர்கள் தங்களின் தனித்தன்மையை வளர்த்து, தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும்' என்று, முதல்வர் விஜய் அறிவுரை கூறி இருக்கிறாரே?



இன்றைய மாணவர்களுக்கு, விஜய் பேசுவதே வேதவாக்கு; இந்த நல்ல அறிவுரையை யும் மனதில் பதித்து சாதிக்க வேண்டும்.

வ.முருகன், விழுப்புரம்:

கோவாவில், திருமண முறிவு மற்றும் விவாகரத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில், மண வாழ்க்கை சிறக்க சான்றிதழ் படிப்பை, அங்குள்ள பல்கலை அறிமுகம் செய்துள்ளதாமே?



இந்தியா முழுதும்... இல்லை இல்லை... உலகம் முழுதும் கொண்டு வரப்பட வேண்டிய பாடத்திட்டம். சமீபத்தில் ஒரு ஜப்பானியர் என்னை பார்க்க வந்திருந்தார். அவர், 'ஜப்பானில் எவருக்கும் குடும்ப வாழ்விலோ, காதலிலோ, ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளில் கூட நாட்டம் இல்லை' என்கிறார். எல்லாரும் இயந்திரத்தனமான வாழ்க்கையையே வாழ்வதாக அவர் கூறியது, அதிர்ச்சியளித்தது.

Image 1642595

ஏ.கீதா, புதுடில்லி:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்களை, 850 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதே?



இது, நீதிமன்றங்கள் வழக்குகளை விரைவாக முடித்து வைக்க உதவியாக இருக்கும். தண்டனைகளையும் கடுமையாக்கினால், குற்றங்கள் குறையும்; குழந்தைகளும், பெற்றோரும் நிம்மதியாக இருப்பர்.

சிவ.கோபாலன், மதுரை:

'வாடிக்கையாளர் பண பாதுகாப்புக்கு, வங்கிகளே பொறுப்பு' என்ற உயர் நீதிமன்ற உத்தரவு பற்றி?



எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பலர் இன்னும் ஏமாந்து தானே இருக்கின்றனர். வங்கிகளும் பல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு எடுத்துக் கூறுகின்றன. இதற்கு மேல் அவர்களால் என்ன செய்ய முடியும் கோபாலன்?

க.சீனு, செங்கல்பட்டு:

'ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி காவல்துறை பணியாற்ற வேண்டும். காவல்துறை அரசுக்காக தான் பணியாற்ற வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகளுக்காக பணியாற்றக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறித்து?



அதனுடன் அரசியல் கட்சிகள் தங்கள், 'வெயிட்'டை காண்பிப்பதற்காக, காவல் துறையினரை ஏவல் துறையினராக நடத்தக்கூடாது என்றும் கூற வேண்டும்.

சி.சசிகலா, விருதுநகர்:

கூட்டுறவு அங்காடிகளில், 200 ரூபாய்க்கு, 10 அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பு; 100 ரூபாய்க்கு, 10 காய்கறிகள் தொகுப்பு விற்பனை என, அரசின் திட்டங்கள் அசத்துகின்றனவே?



திட்டங்களை ஆரம்பித்தால் மட்டும் போதாது. அவை மக்களுக்கு தொடர்ந்து தரமாக கிடைக்கிறதா என்பதையும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும்.

Image 1642595

எஸ்.ஜெயஸ்ரீ, திருச்சி:

கொச்சியின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக, திருச்சியைச் சேர்ந்த நிஷாந்தினி பொறுப்பேற்பது குறித்து?



கமிஷனரம்மாவுக்கு தமிழகத்தின் சார்பில் ஒரு, 'ராயல் சல்யூட்!'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us