தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/முதல்வர் பதவி குழப்பம் நீங்குமா? சிவகுமார் உடன் கருத்து வேறுபாடு இல்லை என்கிறார் சித்தராமையா

முதல்வர் பதவி குழப்பம் நீங்குமா? சிவகுமார் உடன் கருத்து வேறுபாடு இல்லை என்கிறார் சித்தராமையா

முதல்வர் பதவி குழப்பம் நீங்குமா? சிவகுமார் உடன் கருத்து வேறுபாடு இல்லை என்கிறார் சித்தராமையா


ADDED : டிச 02, 2025 02:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2025 02:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: நாங்கள் இருவரும் 2028ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு இல்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு மோதல் நீடித்து வருகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகிய இருவரது ஆதரவாளர்கள் போரக்கொடி தூக்கினர். இந்த சூழலில், இன்று (டிச.,02) சித்தராமையா, சிவகுமார் ஆதரவாளர்கள் இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டுள்ளனர். இன்று சிவகுமாரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு சித்தராமையா வருகை தந்தார். இவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சித்தராமையா கூறியதாவது:

காலை விருந்து சிறப்பாக அமைந்தது. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் விரும்புகிறோம். எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலே மிகவும் முக்கியம். இது தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். நாங்கள் இருவரும் 2028ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு இல்லை.

காங்கிரசில் நாங்கள் ஒரே குரலாக இயங்கி வருகிறோம். கட்சியில் எந்த வித்தியாசமும் இல்லை. இது ஊடகங்கள் கிளப்பி விடுவது ஆகும். அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து காங்கிரஸ் உயர்மட்டம் முடிவு செய்ய வேண்டும். எதிர்காலத்திலும் நாங்கள் ஒன்றாக அரசை நடத்துவோம். எங்கள் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒன்றுபட்டுள்ளோம், நாங்கள் ஒன்றாக எதிர்ப்பை எதிர்கொள்வோம். காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை கடைபிடிப்பேன். அவர்களை சந்திக்கச் செல்வேன். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us