தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மகள் போட்டியிடுவாரா? அமைச்சர் சதீஷ் பதில்!

மகள் போட்டியிடுவாரா? அமைச்சர் சதீஷ் பதில்!

மகள் போட்டியிடுவாரா? அமைச்சர் சதீஷ் பதில்!


ADDED : மார் 18, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி, : ''காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால், சிக்கோடி தொகுதியில் என் மகள் போட்டியிடுவார்,'' என பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.

பெலகாவியின் சிக்கோடி லோக்சபா தொகுதியில் தன் மகள் பிரியங்காவை களமிறக்குவது குறித்து, தொண்டர்கள், தொகுதி தலைவர்களுடன், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தொடர் ஆலோசனை நடத்துகிறார்.

நிப்பானி, சிக்கோடி, அதானி, ராய்பாக் பகுதி தலைவர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின் சதீஷ் ஜார்கிஹோளி கூறியதாவது:

சிக்கோடி லோக்சபா தொகுதி வேட்பாளர் தொடர்பாக, ஆலோசனை நடத்தினேன். இன்றும் ஆலோசனை கூட்டம் நடத்துவேன். எட்டு தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களின் கருத்துக்கgளை கேட்டறிகிறேன். பிரியங்கா வேட்பாளராகலாம் அல்லது வேறு யாராவது போட்டியிடலாம்.

அனைவரின் கருத்துகளை கேட்டறிந்து, அறிக்கை தயாரித்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பப்படும். வேட்பாளர் யார் என்பதை, மேலிடம் முடிவு செய்யும்.

என் மகள் பிரியங்கா போட்டியிட வேண்டும் என, உத்தரவிட்டால் நாங்கள் தயார். என் மகளுக்கு இன்னும் சீட் உறுதியாகவில்லை. மேலிடம் உத்தரவிட்டால் போட்டியிட்டே ஆக வேண்டும்.

ரமேஷ் கத்தி, காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். இவரை கட்சிக்கு அழைத்து வருவது குறித்து, தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us