நான்கு ராஜ்யசபா எம்.பி.,க்கள் மீண்டும் தேர்வு ஆவரா?
நான்கு ராஜ்யசபா எம்.பி.,க்கள் மீண்டும் தேர்வு ஆவரா?
ADDED : ஜன 29, 2024 11:03 PM
பெங்களூரு: பதவிக்காலம் முடியும் நிலையில், கர்நாடகா ராஜ்யசபா எம்.பி.,க்கள், நான்கு பேர் மீண்டும், தேர்வாக வாய்ப்பு உள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள 56 பேரின் பதவிக்காலம், ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
இவர்களில் கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, பா.ஜ.,வின் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், காங்கிரசின் ஹனுமந்தய்யா, சந்திரசேகர், சையது நசீர் உசேன் ஆகியோரும் அடங்குவர்.
புதிய உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க, பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்ந்து எடுக்க, 45 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அப்படி பார்த்தால் காங்கிரஸுக்கு 135 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது.
இதனால் அவர்களால் 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். பா.ஜ.,வுக்கும் 65 எம்.எல்.ஏ.,க்கள் பலம் இருப்பதால், அவர்களாலும் ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும்.
இதனால் பதவிக்காலத்தை முடிக்கும், எம்.பி.,க்களே மீண்டும் போட்டியிட்டால், அவர்கள் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தல் பெங்களூரு விதான் சவுதாவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.