ஜக்கூர் ரயில்வே மேம்பாலம் யுகாதி வேளையில் திறப்பு?
ஜக்கூர் ரயில்வே மேம்பாலம் யுகாதி வேளையில் திறப்பு?
ADDED : ஜன 29, 2025 08:16 PM
பெங்களூரு; பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள, ஜக்கூரின் ரயில்வே மேம்பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது. யுகாதி வேளையில் முடிய வாய்ப்புள்ளது.
பெங்களூரு மாநகராட்சி சாலை பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 11 ஆண்டுகளாக, ஜக்கூரின், ரயில்வே மேம்பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆரம்பத்தில் தென்மேற்கு ரயில்வே துறை செயல்படுத்தியது.
எட்டு பில்லர்கள் அமைப்பது உட்பட சில பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், செலவு அதிகம் என்பதால் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
அதன்பின் இந்த திட்டத்தை, ரயில்வேத் துறை, பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைத்தது. தலைமை கமிஷனரின் உத்தரவுப்படி, வேறு ஒப்பந்ததாரரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. 15 கோடி ரூபாய் செலவில், பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
யுகாதி வேளையில் பணிகள் முடிந்து, திறந்து வைக்க வாய்ப்புள்ளது. மேம்பாலம் பணிகள் முடிந்தால், சிவாஜி நகரில் இருந்து, எலஹங்காவை சென்றடைய பஸ்களுக்கு மற்றொரு பாதை இருக்கும்.
ஹென்னுார், ஹொரமாவுவில் இருந்து வரும் வாகனங்கள், நாகவாரா, மரியண்ண பாளையா, அம்ருதஹள்ளி, ஜக்கூரில் நுழைந்து மீண்டும் எலஹங்காவை அடையலாம்.
பணிகள் தாமதமானால், பொது மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டது. பள்ளி பஸ்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தின.
இந்த சாலைகள் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்தது.
ரயில்வே கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மேம்பால பணிகள் முடிந்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

