sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய அரசாவது யமுனையை சுத்தம் செய்யுமா? காலிந்தி கஞ்ச் மக்கள் எதிர்பார்ப்பு

/

புதிய அரசாவது யமுனையை சுத்தம் செய்யுமா? காலிந்தி கஞ்ச் மக்கள் எதிர்பார்ப்பு

புதிய அரசாவது யமுனையை சுத்தம் செய்யுமா? காலிந்தி கஞ்ச் மக்கள் எதிர்பார்ப்பு

புதிய அரசாவது யமுனையை சுத்தம் செய்யுமா? காலிந்தி கஞ்ச் மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 10, 2025 11:19 PM

Google News

ADDED : ஜன 10, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'சட்டசபை தேர்தலில் வாக்குறுதிகளுடன் அரசியல் கட்சித் தலைவர்கள் வீடு,வீடாக வந்து ஓட்டுக் கேட்கத் துவங்கி விட்டனர். ஆனால், மாசு நிறைந்துள்ள யமுனையை சுத்தம் செய்ய மட்டும் திட்டம் எதுவும் இல்லை'என காலிந்தி கஞ்ச் மக்கள் கூறுகின்றனர்.

காலிந்தி கஞ்ச்சில் வடிக்கும் ராம் பாஸ்வான்,58, கூறியதாவது:

பல ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேம். ஒரு காலத்தில் யமுனை நதி நீர் சுத்தமாகவும், குடிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆனால், இப்போது யமுனை அருகில் வசிக்கக் கூட முடியவில்லை. கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொழிற்சாலை கழிவுகளால், நதி நீரில் வெள்ளை நிற நுரை படர்ந்துள்ளது. பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் நதியில் மிதக்கின்றன. தேர்தல் வரும்போதெல்லாம், ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்கள் கட்சி வித்தியாசமின்றி, யமுனை சுத்தம் செய்யப்படும் என்றுதாக் கூறுகின்றனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் வாக்குறுதியை மறந்து விடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மியும் யமுனை நதியை சுத்தம் செய்யும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை என காரணம் கூறி வருகிறது.

ஆனால், இந்தத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் யமுனையை சுத்தம் செய்வதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். யமுனையுடன் இணைக்கும் வடிகால்கள் அருகே வடிதொட்டி கட்ட வேண்டும். அப்படி செய்தால், கழிவு நீர் ஆற்றில் செல்வதற்கு முன் குப்பைகள் வடிகட்டப்படும். காலிந்தி கஞ்சில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான நதிக்கரை, மின்விளக்கு மற்றும் பாதுகாப்பு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 2022ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கைப்படி டில்லியில் மட்டும் யமுனை நதியில் 25 கழிவுநீர் வடிகால்வாய்கள் இணைக்கப்பட்டுள்ளன.

யமுனா நதியில் மாசுபாடு என்பது சுற்றுச்சூழல் பிரச்னை மட்டுமின்றி, சுகாதார கேட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு சடங்குகளுக்காக யமுனை நதிக்கு ஏராளாமானோர் வருகின்றனர். அதில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. .

காலிந்தி கஞ்ச் காட் ஒன்றில், நண்பர் வீட்டு இறுதிச் சடங்கு நிகச்சிக்கு வந்திருந்த மிதுன்,36, என்பவர் கூறியதாவது:

ஒரு நிமிடம் கூட இங்கு நிற்க முடியவில்லை. அந்த அளவுக்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. சடங்கின் ஒரு பகுதியாக என் நண்பர் நதி நீரில் குளிக்க வேண்டும். ஆனால், நச்சு நிறைந்த இந்த நீரில் எப்படி குளிப்பது என யோசித்தார். ஆனால், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வற்புறுத்தலால் வேறு வழியின்றி மாசி நிறைந்த நீரில் குளித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றனர். ஆனால், தேர்தல் முடிவுக்குப் பின் எங்களை மறந்து விடுகின்றனர். யமுனை நதியில் குளிக்க வேண்டாம் என நிபுணர்களே எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே பகுதியில் வசிக்கும் லம்பு சிங், “உடல்நலத்துக்கு கேடு ஏற்படும் என்றாலும் எங்களுக்கு யமுனை தண்ணீரை விட்டால் வேறு வழியில்லை. மாசி நிறைந்த இந்த நதியில்தான் தினமும் குளிக்கிறோம். கண் மற்றும் தோல் பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கும் சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், யமுனை கரையில் குடியிப்போர் இணைந்து அவ்வப்போது நாங்களாகவே சுத்தம் செய்கிறோம். அதேநேரத்தில், குப்பைகளை அள்ளிச் செல்ல லாரி அனுப்புமாறு கேட்டோம். ஆனால், அதைக்கூட அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை,”என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் பங்கஜ் குமார் கூறியதாவது:

டில்லியின் வடிகால்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால் யமுனை நதி சீரழிந்து வருகிறது. கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதில்லை என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே தன் அறிக்கையிலும் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் புதிய அரசாவது யமுனையை சுத்தப்படுத்துவதற்கு முன், நதியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு சுற்றுச்சூழல் ஆர்வலர் பவ்ரீன் கந்தாரி, “இது காலிந்தி கஞ்ச் பகுதிக்கான பிரச்னை மட்டுமல்ல. இந்த நதி டில்லியின் உயிர்நாடியாக விளங்குகிறது. ஒட்டுமொத்த டில்லியின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் மாசு நிறைந்த யமுனை நீரால் பாதிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us