ADDED : நவ 01, 2024 07:04 AM
முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:
இடைத்தேர்தல் நடக்கும் ஷிகாவியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக அஜ்ஜம்பீர் காத்ரி வேட்புமனுத் தாக்கல் செய்தார். நாங்கள் அவரிடம் பேச்சு நடத்தினோம்.
நீங்கள் கட்சியின் ஒழுக்கமான சிப்பாய். கட்சி அறிவித்துள்ள வேட்பாளருக்கு எதிராக போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். இதனால் அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். வரும் காலத்தில் அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படும்.
இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். வரும் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்ய உள்ளேன்.
மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு பொய் சொல்வதை தவிர வேறு எதுவும் தெரியாது. பொய்யை திரும்ப திரும்ப கூறுவதில் அவர் வல்லவர். அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஏதாவது ஒன்றை அவர் நிரூபித்தது உண்டா?
இவ்வாறு அவர் கூறினார்.

