கனடா விசா பெற்று தருவதாக பெண்ணிடம் ரூ.14.5 லட்சம் மோசடி
கனடா விசா பெற்று தருவதாக பெண்ணிடம் ரூ.14.5 லட்சம் மோசடி
ADDED : ஜன 21, 2025 07:16 PM
ரோகிணி: கனடா விசாவைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடம் 14.5 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
ரோகிணியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், கனடாவுக்கு குடியேற விரும்பினார். இதற்காக டில்லியில் உள்ள தனியார் ஏஜென்சியை அணுகினார். 2023 ஜூலையில் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டதன்பேரில் விசா சேவைகளுக்காக 24 லட்ச ரூபாய் செலுத்தினார்.
ஆனாலும் கொடுத்த வாக்குறுதிபடி அவருக்கு விசா பெற்றுத் தரவில்லை. இதையடுத்து பணத்தை அவர் திரும்பிக் கேட்டதில் சில காசோலைகளை வழங்கினர். அதில் ஒரு காசோலை பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து, தன்னை 14.5 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.