ADDED : பிப் 03, 2025 04:52 AM

நாயண்டஹள்ளி; பி.எம்.டி.சி., பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
பெங்களூரு, காமாட்சிபாளையாவில் வசித்தவர் சரோஜா, 42. இவர் நேற்று முன்தினம் மாலை, தனது சகோதரருடன் பைக்கில் கிளம்பினார். ஞானபாரதியில் வசிக்கும் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் சரோஜாவும், அவரது சகோதரரும் பைக்கில் வீட்டிற்கு சென்றனர். நாயண்டஹள்ளி அருகே சென்ற போது, சாலையோரம் நின்ற காரின் கதவை டிரைவர் திடீரென திறந்தார்.
இதனால் கார் கதவில் மோதி பைக் கவிழ்ந்தது. பைக்கில் இருந்து சரோஜாவும், அவரது சகோதரரும் சாலையில் தவறி விழுந்தனர்.
அப்போது பின்னால் வந்த பி.எம்.டி.சி., பஸ் சக்கரத்தில் சரோஜா சிக்கினார். அவரது உடலில் சக்கரம் ஏறி, இறங்கியது.
உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கார், பஸ் டிரைவர்கள் மீது பேட்ராயனபுரா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

